சென்னை:

ரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

அதைத்தொடர்ந்து நடைபெற்று வரும் செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு வருகின்றன.

அதில், இரட்டை இலையை மீட்டெப்போம் என்றும்,   சசிகலா பொதுச்செயலராக நியமனம் ரத்து என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், அதிமுகவில் ஜெயலலிதா மட்டுமே பொதுச்செயலாளர். இனிமேல் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது என்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டு உள்ளது. அதற்காக அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதற்காக வழிகாட்டுதல் குழுவுக்கு அதிகாரம் வழங்க ஒப்புதல் அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒருவரை கட்சியில் இருந்து நீக்கவோ, சேர்க்க இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம்.

ஒருங்கிணைப்பு தலைவராக ஒபிஎஸ்சும், துணை தலைவராக இபிஎஸ்-க்கும் அதிகாரம் அளித்தும் தீர்மானம்.

ஒருங்கிணைப்பு தலைவர், துணைத்தலைவருக்கு பொதுச்செயலாளருக்கான அதிகாரம் வழங்குவதாகவும் தீர்மானம்.