தமிழகத்தில் இன்னொரு முடக்கத்துக்கு வாய்ப்பில்லை…! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் முழு ஊரடங்கால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அரசின் முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

கொரோனாவால் குணமடைந்தவர்கள் 57.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. சென்னையில் வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை சமூக தொற்று ஏற்படவில்லை. நோயை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். முகஙககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

நோய் பரவலை தடுக்க வேண்டும், அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கும் வாய்ப்பு இல்லை.

ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களின் ஒத்துழைப்பு ரொம்ப அவசியம் என்று தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி