jaya cm 6
பதவியேற்றார் ஜெயலலிதா..

முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் மற்றும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது குறித்து திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
அமைச்சரவை பட்டியலை நமது பத்திரிக்கை.காம் பக்கத்தில் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம்.
இதில் தேவர் சாதியினருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்தப் பட்டியலில், ஆதிராவிடர் அல்லது முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
admk number caste
vck thirumavalavanஅதிமுக வெளியிட்டுள்ள அமைச்சரவைப் அப்பட்டியலில் தலித் வகுப்பைச் சார்ந்தவர்கள் மூவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, இந்த முறை தலித் கிறித்தவர் ஒருவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. அதே வேளையில், இந்தப் பட்டியலில் இசுலாமியர் ஒருவருக்குக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.
அதேபோல, ஆதி திராவிடர் சமூகத்தில் ஒருவருக்கும் வாய்ப்பளிக்கவில்லை என்பது அச்சமூகத்திற்கு இழைக்கும் துரோகமாகும். ஒரே கல்லில் மூன்று காய் என்று சொல்லும் வகையில் பெஞ்சமின் என்பவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மைச் சமூகத்திற்கு வழங்கியுள்ளோம் என்றும், தலித் கிறித்தவர் ஒருவருக்கு வழங்கியுள்ளோம் என்றும் சொல்லிக்கொள்ளலாம் என்னும் நோக்கில் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இது தலித் மற்றும் சிறுபான்மையினரை வஞ்சிக்கும் செயலாகும். தலித் சமூகத்தின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுக்கொண்டு அச்சமூகத்தை வஞ்சிப்பது மனசாட்சிக்கு எதிரான செயலாகும். எனவே, அமைச்சரவையில், இசுலாமியருக்கும் ஆதிதிராவிடருக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதுதான் நன்றிக்குரிய செயலாக அமையும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது என்று கூறியுள்ளார்.