மும்பை சிறையில் வெளிச்சம் இல்லையாம்: லண்டன் நீதிமன்றத்தில் விஜய்மல்லையா வாதம்

--

ந்திய சிறையில் வெளிச்சம் இல்லை என்று, இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று  லண்டனில் அடைக்கலமாகியிருக்கும், பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, விஜய் மல்லையாவை இந்தியாவில் அடைக்க இருப்பதாக கூறப்படும், சிறையின் வீடியோ பதிவை சமர்ப்பிக்குமாறு இந்தியாவுக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்தியாவில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி வாங்கிவிட்டு, இங்கிருந்து தப்பிச்சென்று இங்கிலாந்து குடிரிமை பெற்று லண்டனின் வசித்து வருகிறார் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா.

லண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு லண்டன் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று நடைபெற்றது.

அப்போது, விஜய்மல்லையா சார்பில் வாதாடிய வழக்கறிஞர், கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்கும் வகையில், தான் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட இருக்கும் மும்பை சிறையில் இயற்கையான வெளிச்சமோ அல்லது காற்றோட்டமோ இல்லை.  அதனால் விஜய்மல்லை யாவுக்கு  இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட அனுமதிக்கக் கூடாது என கூறப்பட்டது.

இதை கேட்ட நீதிபதி, மல்லையாவை இந்தியாவில் அடைக்க இருப்பதாக கூறப்படும், சிறையின் வீடியோ பதிவை சமர்ப்பிக்குமாறு இந்தியாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

விசாரணையின்போது,  மும்பை ஆர்த்தர் ரோடு சிறையின் புகைப்படம் இந்தியா சார்பில் கொடுக்கப்பட்டது. ஆனால், அதில் வெளிச்சம் வருவது போன்ற கேமரா யுக்தியை பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும், படத்தை வைத்து முடிவுக்கு வரக் கூடாது என்றும் மல்லையா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மல்லையாவை அடைத்து வைக்கப் போகும் சிறைக்குள், ஒருவர் சென்று வருவது போல் வீடியோ பதிவை எடுத்து அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்தே விஜய்மல்லையா இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவாரா அல்லது லண்டனிலேயே தொடர்ந்து இருப்பாரா என்பது தெரிய வரும்.