தமிழகத்தில் நவோதயப் பள்ளிகள் இல்லாதது துரதிருஷ்டம்! மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

சென்னை,

மிழகத்தில் நவோதயப் பள்ளிகள் இல்லாதது துரதிருஷ்டமானது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

மாணவர்கள் திறன் மேம்பாடு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சென்னை கிண்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய   மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மாணவர்களின் முன்னேற்றத்துப் பிரதமர் நரேந்திர மோடி நான்கு வகையான கல்வி முறைகளை வகுத்துள்ளதாக கூறினார்.

பாரதிய வித்யா பவன் பள்ளிகளில் உடற்பயிற்சிக் கல்வியின் மீது அதிக அக்கறை செலுத்துவதால் அந்தப் பள்ளிகளில் கல்வி மேம்பட்டு உள்ளதாக கூறிய அமைச்சர், நாடு முழுவதும் உள்ள  கிராமப்புற மாணவர்கள்  நவோதயா பள்ளிகள் மூலம்  பயன்பெறுகின்றனர்.. ஆனால், தமிழகத்தில் மட்டும் நவோதயா பள்ளிகள் இல்லாதது துரதிருஷ்டமானது என்று கூறினார்.

மிழகத்தில். நவோதயா பள்ளிகள் தொடங்க  தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி குமரி மகா சபா அமைப்பு தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளை, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க அனுமதி அளித்திருந்தது. ஆனால், அதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில்,  தமிழகத்தில்  நவோதயா பள்ளிகள் தொடங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி