பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:

ருப்புக்கோட்டை பேராசிரியை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணையே போதுமானது, சிபிஐ விசாரணை தேவையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறானச் செயலுக்கு அழைப்பது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பேராசிரியை நிர்மலா கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் பல்வேறு வி.ஐ.பி-க்களுக்குத் தொடர்புள்ளதாக பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. இதையடுத்து நேற்று மாலை அவசரமாக ஆளுநர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது,  நிர்மலா தேவியை நான் பார்த்ததுகூட இல்லை என்று ஆளுநர் தெரிவித்தார். மேலும், விசாரணை குழுவின் அறிக்கைபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் சந்திப்பு முடியும் தருவாயில் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பேராசிரியை நிர்மலா விவகாரத்தில்  எதிர்கட்சியினர் பலரும் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தி வருகின்றனர். எனவேதான் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்றும் சிபிசிஐடி, சிபிஐ-க்கு இணையானது என்றும் கூறினார்.

மேலுரும், இந்த விவகாரத்தில் உண்மை நிலை கண்டறிந்து யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று கூறினார். இந்த விவகாரத்தில் யாருக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள், ஆளுநர் பெண் செய்தியாளரின் கன்னத்தை தட்டியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, கருத்து தெரிவிக்க மறுத்த ஜெயக்குமார்,  து குறித்து ஆளுநர் மாளிகைதான் கருத்து தெரிவிக்க முடியும் என்று  கூறினார்.