குவாஹாத்தி: எல்லை மாவட்டங்களில் இருந்து அதன் 20% பெயர்களை மீண்டும் சரிபார்க்க உச்சநீதிமன்றம் அனுமதித்தால், உத்தேச நாடு தழுவிய என்.ஆர்.சி.யின் ஒரு பகுதியாக மாநிலம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று அசாம் அரசு 23ம் தேதியன்று தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) மாநில அரசு ஏற்கவில்லை, இதன் இறுதி பதிப்பு ஆகஸ்ட் 31 அன்று 19 லட்சத்துக்கும் மேற்பட்ட விலக்குகளுடன் வெளியிடப்பட்டது என்று நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“எல்லை மாவட்டங்களில் 20 சதவிகித மறு சரிபார்ப்புக்கான எங்கள் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், எங்களுக்கு (அசாம்) ஒரு தேசிய அளவிலான சரிபார்ப்பு தேவையில்லை. மறு சரிபார்ப்பு செயல்பாட்டில் நிறைய தவறுகள் கண்டறியப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்று அவர் கூறினார்.

எல்லை மாவட்டங்களில் என்.ஆர்.சி வரைவில் 20 சதவீத பெயர்களை மீண்டும் சரிபார்க்க வேண்டி அசாம் அரசு இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தது, ஆனால் அந்த மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

“நாடு தழுவிய என்.ஆர்.சி.க்கு எந்த திட்டமும் இல்லை என்று பிரதமர் நேற்று கூறினார். எனவே நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மட்டுமே தொடர வேண்டும். அது எங்கள் கோரிக்கையை செவிமடுக்கவில்லை என்றால், நாங்கள் இந்திய அரசை அணுக வேண்டியிருக்கும்“, என்று அவர் கூறினார்.

என்.ஆர்.சி உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் வெளியிடப்பட்டது என்பதை இவ்வேளையில் நினைவுகூற வேண்டியிருக்கிறது.