Random image

கொரோனா: தடுப்பு மருந்து தேவையில்லை என்ற என்ற டிரம்ப் – ஒரு இலட்சத்தை தாண்டிய உயிர்பலி

மைக் பென்ஸ், அமெரிக்க துணை ஜனாதிபதியின் பத்திரிக்கை தொடர்பாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது. இரஷ்யாவில் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக 10,000 புதிய நோயாளிகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

அமெரிக்க துணை ஜனாதபதி மைக் பென்ஸின் பத்திரிகை தொடர்பு செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதைக் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜனாதிபதி டிரம்ப் பேசும்போது “தடுப்பு மருந்து இல்லாமலேயே கொரோனா தொற்று நீங்கிவிடும்” என்றும், அமெரிக்காவில் 95,000 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பலியாகலாம்” என்றும் கூறினார். இன்றைய நிலவரப்படி உயிர்பலி ஒரு இலட்சத்தைக் கடந்து விட்டது. அமெரிக்க ஜனாதிபதியின் இந்த பேட்டி அவரது கட்சி எம்.பிக்கள் மத்தியில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் கிட்டத்தட்ட 15% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் வெறும் 3.5% ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20 மில்லியன் மக்கள் வேலை இழந்துள்ளனர். மைக் பென்ஸின் பத்திரிகை தொடர்பாளர் ஏற்கனவே ஒரு முறை பரிசோதிக்கப்பட்டு கொரோன இல்லை எனக் கூறப்பட்டவர். தற்போது அவருக்கு உறுதிப்பட்டிருக்கிறது. வெள்ளை மாளிகையின் அதிகார வட்டத்திற்குள்ளேயே கொரோனா பரவியுள்ளது கவலையளிக்கக் கூடிய செய்தியாகும். இவர் வெள்ளை மாளிகையின் குடியேற்ற ஆலோசகரும், பேச்சாளர் மற்றும் எழுத்தாளருமான ஸ்டீபன் மில்லரை மணந்தவர். வியாழக்கிழமை டிரம்பின் தனிப்பட்ட அதிகாரிகளில் ஒருவரும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டார்.

95,000 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இறப்பார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறி, கொரோனா பற்றிய அமெரிக்கர்களின் நிலையின் மீதான உலகின் எதிர்பார்ப்புகளை மீண்டும் எகிற வைத்துள்ளார் ஜனாதிபதி டிரம்ப். இந்த பேட்டிக்கு பிறகு, தற்போது,  அமெரிக்காவில் தற்போது மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 1 இலட்சத்தையும் கடந்துவிட்டிருக்கிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 20 பேர் புதிய நோயாளிகளாகவும், சுமார் 750 – 1,000 பேர் ஒரு நாளைக்கு மரணமடையவும் செய்கிறார்கள். வைரஸ் தொற்று குறித்து தவறான வதந்திகளை சீனாவும் ரஷ்யாவும் பரப்புவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ஆதாரமாக, மாஸ்கோவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நுட்பங்களை சீனா அதிகளவில் பின்பற்றி வருவதைக் கூறினார். “கோவிட் -19 நெருக்கடிக்கு முன்பே, ரஷ்யாவிற்கும் பி.ஆர்.சிக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட அளவிலான ஒத்துழைப்பு இருப்பதைக் நாங்கள் கண்டு சந்தேகப்பட்டோம்” என்று வெளிநாட்டு விவகாரங்களை கண்காணிக்கும் வெளியுறவுத் துறையின் உலகளாவிய ஈடுபாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் லியா கேப்ரியல் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு சாத்தியமான பரந்த முயற்சியின் அவசியத்தை சுட்டிக்காட்டி, அமெரிக்க சுகாதார காங்கிரஸின் வெளியுறவுக் குழுக்களின் தலைவர்கள் கிட்டத்தட்ட 60 நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பில் தைவானின் பங்களிப்பை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டனர். தைவான் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக இல்லாததால், இந்த நடவடிக்கை சீன-அமெரிக்க உறவை பாதிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், தைவானை தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கருதும் சீனாவின் ஆட்சேபனை காரணமாக உலக சுகாதார அமைப்பிலிருந்து ஏற்கனவே விலக்கப்பட்டுள்ளது. WHO-ன் முடிவெடுக்கும் அமைப்பான உலக சுகாதார சபையின் வாஷிங்டன் மற்றும் பல அமெரிக்க நட்பு நாடுகளின் ஆதரவோடு இந்த மாதம் ஒரு நிர்வாகக் குழுவில் சேர தைவான் முயன்று வருகிறது. WHO-லிருந்து விலக்குவது கொரோனா வைரஸுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஆபத்தான இடைவெளியை உருவாக்கியுள்ளது என்று தைவான் வாதமாகும்.

இன்றைய நிலவரப்படி, சீனாவில சுமார் 100 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் உள்ளனர். ஒரு வாரத்திற்கு சராசரியாக 4-10 நோயாளிகள் உறுதிப்படுத்தப்படுகின்றனர். ஒட்டுமொத்த நோயாளிகள், சுமார் 83000 பேர்களும், 4600  மரணமடைந்தும் உள்ளனர்.  என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இத்தாலியில், மிலனில் உள்ள புகழ்பெற்ற சாக்கோ மருத்துவமனையின் தொற்று நோய்கள் துறையின் தலைவர் மாசிமோ கல்லி, வைரஸ் பரவுவதைப் பொறுத்தவரை வடக்கு நகரம் “ஒரு குண்டு” போன்றது என்று கூறினார். இந்நகர மக்கள், ஊரடங்கு, கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் என எதையும் மதிக்காமல், கால்வாய் ஓரங்களில் ஓய்வெடுக்கும் புகைப்படங்கள் செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ளன.

மிலனின் மேயர் கியூசெப் சலா, இந்த நடத்தை “வெட்கக்கேடானது” என்றும், மக்கள் விதிகளை மீறுவதில் தொடர்ந்து ஈடுபட்டால் நன்கு அறியப்பட்ட அபெரிடிஃப் பகுதி மூடப்படும் என்றும் கூறினார். இத்தாலியின் நோய்த்தொற்று எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 40% லோம்பார்டி பிராந்தியத்தில் உள்ளன. அவற்றில் மிலன் அதிகப் பங்கு வகிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, இறந்தவர்களின் எண்ணிக்கை 30,000-த்தைக் கடந்த இறந்தவர்களின் எண்ணிக்கையுடன், இத்தாலி முதலிடத்தில் உள்ளது. ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பிரிட்டனும் அந்த “ சாதனையை” தகர்த்து, பலி என்னிக்கு 38 ஆயிரம் பேரை எட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது உச்சநிலையைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இங்கிலாந்துக்கு வரும் பயணிகள் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள், போரிஸ் ஜான்சன் இதை விரைவாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் யூரோஸ்டார் ரயில் நிலையங்களுக்கு வருபவர்களையும், தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டைம்ஸ் செய்தித்தாளில் ஒரு அறிக்கையின்படி, டிஜிட்டல் படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் இரண்டு வாரங்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தும் முகவரி முன்கூட்டியே வாங்கப்படும்.

தொற்றுநோயின் புதிய ஹாட்ஸ்பாட்டாக மாறியபின், ரஷ்யா ஆறு நாட்களாக தொடர்ந்து 10,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளை பதிவு செய்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சுமார் 5000 பேர் இறப்புடன், மொத்த தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 இலட்சத்தை எட்டவுள்ளது. இருந்தும், தற்போதைய பொது முடக்கத்தை தளர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இரஷ்யாவில், கொரோனா பரவல் தாமதமாக நிகழ்ந்து வருவதாகவும், பொது முடக்கம் தளர்த்துவது குறித்து நன்கு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் WHO எச்சரித்துள்ளது.

கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதைப் போன்று தோற்றமளித்தாலும், இது ஒரு தூங்கும் மிருகம் என்பதில் எள்ளளவில் சந்தேகமில்லை. அதே சமயம் சாதாரண ஒரு  வைர பரவலை ஆதாய நோக்கில் பெரிதுபடுவதாக் கூறும் குற்றச்சாட்டுகளும் எழாமல் இல்லை.  உண்மை எதுவாயினும், பாதிக்கப்படுவது என்னவோ சாதாரண அப்பாவி மக்களே!

தமிழில்: லயா