சென்னை:
கொரோனா பாதிப்பு காரணமாக, அனைத்து தொழில்களும் முடங்கி நிதிச்சுமை உருவாகி உள்ளதால், தமிழகத்தில் புதிய அரசு பணியிடங்களுக்குத் தடை உள்பட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

பொருளாதார சரிவை ஈடு செய்ய செலவினக் குறைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசு துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை உருவாக்குவதன் மூலம் ஏற்படும் செலவுகளை தவிர்க்க  தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி,
 தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஏற்கெனவே உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் எனவும் அரசுப் பணியாளர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
அரசு உயர் அதிகாரிகள் உயர் வகுப்பு விமான பயணத்துக்கு அனுமதியில்லை.
அரசு செலவில் வெளிநாடு பயணத்திற்கும் தடை 
தமிழக அரசு அலுவலங்கங்களுக்கான செலவுகளில் 20 சதவிகிதம் குறைக்க உத்தரவிட்டுள்ளது.
 அரசு விழாக்களில் நினைவு பரிசுகள், சால்வைகள், பூங்கொத்துகள் போன்றவைகள் வழங்குவதற்கான செலவுகள் அறவே தவிர்க்க வேண்டும்
அலுவலகத்துக்கு மேஜை, நாற்காலி உள்ளிட்ட அலுவலக தேவைகளை வாங்குவதில் 50 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும்
விளம்பர செலவுகளை 25 சதவிகிதம் குறைத்து கொள்ள வேண்டும்.
அறிவித்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அரசு செலவிலான விருது நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது.
கடும் நிதி நெருக்கடி காரணமாக, சிக்க நடவடிக்கையாக  இந்த அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது.