டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு வருடத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ரூ.20 லட்சம் கோடி அளவிற்கு ஊக்கச் சலுகை திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக இனி புதிய திட்டங்கள் ஒரு வருடத்திற்கு அறிவிக்கப்படாது.  இருப்பினும் பிரதமரின் கரிப் கல்யாண் தொகுப்பு மற்றும் ஆத்மனிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு மட்டுமே செலவு அனுமதிக்கப்படும்.

இது தவிர இந்த நிதியாண்டில் வேறு எந்த திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்படாது. புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்க கோரி பரிந்துரைகளை அனுப்ப வேண்டாம் என்று அனைத்து அமைச்சகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.