புதிய வேலைவாய்ப்பு, வாகன கொள்முதலை நிறுத்திய பாகிஸ்தான் அரசு

ஸ்லாம்பாத்

பாகிஸ்தான் அரசு கடுமையான நிதிப் பற்றாக்குறை காரணமாக புதிய வேலைவாய்ப்புக்கள் மற்றும் வாகன கொள்முதல்களை நிறுத்தி உள்ளது.

பாகிஸ்தான் இம்ரான் கான் அரசு சமீபத்தில் அளித்த நிதிநிலை அறிக்கையில் நிதிப்பற்றாக்குறை மிகவும் அதிகமாக உள்ளது.  இதற்கு சர்வதேச நிதி மேம்பாட்டு மையம் உதவிகளை நிறுத்திக் கொண்டதே  காரணம் என கூறப்படுகிறது.    பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளை ஆதரிப்பதால் சரவதேச நிதி மேம்பாட்டு மையம், உலக வங்கி உள்ளிட்ட பல நிதி நிறுவனங்கள் அவசர உதவியை அளிக்கவும் மறுத்துள்ளன.

எனவே தற்போதுள்ள நிலையில் பாகிஸ்தான் அரசு கடும் சிக்கன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.   ஏற்கனவே அரசு நடத்தும் கலந்தாய்வு உள்ளிட்ட சந்திப்புக்களின் போது தரப்படும்  தேநீர், பிஸ்கட்டுகள் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன.    இதனால் இந்த சந்திப்புக்களில் கலந்துக் கொள்ளும் பல உடல்நலம் குன்றிய அதிகாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இவற்றை பாகிஸ்தான் அரசு கண்டுக் கொள்ளாமல் மேலும் நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.  சமீபத்தில் வெளியிட்டுள்ள அரசு அறிக்கையில் பல புதிய தடைகளை விதித்துள்ளது.

அறிக்கையில்,  ”இனி இரு சக்கர வாகனம் உள்ளிட்ட எவ்வகை வாகனங்களும் அரசு  சார்பில் கொள்முதல் செய்யப்பட மாட்டாது. 

புதிய வேலைவாய்ப்புக்கள் அடியோடு நிறுத்தப்படும்.  மிகவும் அத்தியாவசியமாக இருந்தால் அதற்கான அரசு உத்தரவைப் பெற்ற பிறகு அதற்கான அனுமதி வழங்கப்படும்.

அரசு அலுவலகங்களில் வார அல்லது மாத பத்திரிகைகள், செய்தித் தாள்கள் உள்ளிட்ட எந்த ஒரு பத்திரிகையும் இனி வாங்க்கப்பட மாட்டாது

அரசு அதிகாரிகள் இனி மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, குடிநீர்  உள்ளிட்ட உபயோகங்களைக் கடுமையாகக் கண்காணிப்பார்கள்.  அது மட்டுமின்றி புது சொத்துக்கள் வாங்குவது பராமரிப்பது உள்ளிட்டவை மிகக் குறைந்த அளவில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

அரசு உபயோகப்படுத்தும் காகிதங்களில் இனி இருபக்கமும் எழுத வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.