மும்பை தடையுத்தரவில் புதிய கட்டுப்பாடுகள் எதுவுமில்லை: மாநகர காவல்துறை

மும்பை: மராட்டிய தலைநகரில் நடைமுறையிலிருக்கும் 144 தடையுத்தரவின் கீழ், எந்தவித புதிய கட்டளைகளும் பிறப்பிக்கப்படவில்லை என்று அம்மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மும்பை காவல்துறை எந்தவொரு புதிய கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. மும்பையில் விதிக்கப்பட்டுள்ள 144 தடையுத்தரவு என்பது, சட்டப்படி காலஅடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுவது இயல்பே.

அந்த வகையில்தான், இன்றும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. எனவே, இன்று எந்தவித புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. பழைய நிலை அப்படியே தொடர்கிறது” என்று காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ இணைந்து பொது இடங்களிலோ அல்லது மதம் தொடர்பான இடங்களிலோ நடமாடுதல் அல்லது கூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் 144 தடையுத்தரவின் மூலம், மும்பையில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

You may have missed