Random image

அகமதாபாத் அதிகாரி ஐந்தாம் தேதி முதல் மாயம் : மனைவி கவலை

கமதாபாத்

ரு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அகமதாபாத் முன்னாள் காவல்துறை அதிகாரி பற்றிய தகவல் தெரியாததால் அவர் மனைவி கவலை அடைந்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணி புரிந்தவர் சஞ்சிவ் பட்.  இவர் பானஸ்கந்தா மாவட்ட காவல்துறை சூப்பிரண்டாக பணி புரிந்து வந்தார்.  அப்போது அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவர் மீது போதை மருந்து வைத்திருந்ததாக பொய் வழக்கு போட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.   அதை ஒட்டி இவர் அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டார்.

அகமதாபாத்தில் 2002 ஆம் வருடம் நடந்த கலவரத்தின் போது இவர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கடந்த 2015 ஆண்டு இவர் பணி நீக்கம் செய்யப்படார்.    உண்மையில் இவர் குஜராத் கலவர வழக்கில் அப்போதைய முதல்வர் மோடியை குறித்து உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்ததே காரணம் என கூறப்படுகிறது.

பானஸ்கந்தா மாவட்டத்தில் சஞ்சிவ் மீது எழுந்த புகாரை ஒட்டி விசாரணைக்காக அவரை கைது செய்து காவல்துறையினர் இந்த மாதம் 5 ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளனர்.   ஆனால் அதற்குப் பிறகு அவர் எங்குள்ளார் என்பது யாருக்கும் தெரியாமல் மர்மமாக வைக்கப்பட்டுள்ளது.  இதை ஒட்டி சஞ்சிவ் பட்டின் மனைவி ஸ்வேதா தனது கணவரின் டிவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “நான் ஸ்வேதா சஞ்சிவ் பட் பேசுகிறேன்.  எனக்கு தற்போது தெரிவிக்க ஒன்றுமே இல்லை.  இதுவரை சஞ்சிவ் எங்குள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.  கடந்த 12 நாட்களாக அவர் மாயமாகி உள்ளார்.  என்னால் அவரை கண்ணால் காணவும் முடியவில்லை.”  என கவலையுடன் பதிந்துள்ளார்.

அவருடைய இந்த டிவிட்டர் பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ஸ்வேதா டிவிட்டரில்,”நான் எப்போதும் என் கணவர் செயலை தான் ஆதரிப்பேன்.  அதனல் எனது குரலும் ஒடுக்கபடும் என நான் நினைக்கிறேன்” எனவும் பதிந்துள்ளார்.