பஞ்சாப் மாநிலத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் இரவு நேர லாக்டவுன் ரத்து…!

சண்டிகர்: பஞ்சாப்பில் ஜனவரி 1ம் தேதி முதல் இரவு நேர லாக்டவுன் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக டிசம்பர் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை இரவுநேர லாக் டவுன் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்ததால், ஜனவரி 1ம் தேதி முதல் இரவு நேர லாக்டவுன்  ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து நகரங்களிலும் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. 100 மற்றும் 250 பேர் வரை பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்த கூட்டங்களுக்கு 200 மற்றும் 500 பேர் வரை பங்கேற்க தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது. ஆனாலும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.