சென்னை,
மிழகத்தில் நடைபெற இருக்கும் இடை த்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட தடையில்லை என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு  தெரிவித்து சென்னையை சேர்ந்த பாஸ்கர் என்பவர்  உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஏற்கனவே கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பாக செந்தில்பாலாஜியும், திமுக சார்பில் கே.சி.பழனிச்சாமியும் போட்டியிட்டனர். அங்கு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது நிருபிக்கப்பட்ட தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தற்போது அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் போட்டியிட பழைய வேட்பாளர்களையே அதிமுக வும், திமுகவும் அறிவித்து உள்ளன.
இதனை எதிர்த்து, செந்தில் பாலாஜி தேர்தலில் போட்டியிட தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மனுவில்,  திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர்  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பி.ஏ.க்களை வைத்து 4.5 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். அதனால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
அவரது மனு இன்று ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாக செந்தில் பாலாஜி தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்று தெரிகிறது.