கமதாபாத்

டந்த 7 வருடங்க்ளாக குஜராத் மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 22.4% குறைந்துள்ளது.

உயர் கல்வி வழங்கும் பல பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் தற்போது முழுவதுமாக நிறம்புவது கிடையாது. அதிலும் குறிப்பாக சில மாநிலங்களில் கல்விச் சேவை வழங்குவதும் குறைவாக உள்ளது. குஜராத் மாநிலம் கல்வி சேவை வழங்குவதில் 16 ஆம் இடத்தில் உள்ளது. இது குறித்து தேசிய கல்வித்துறை திட்ட நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தியது.

அந்த ஆய்வின் முடிவில், “கடந்த 7 வருடங்களில் குஜராத் மாநில அரசு உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 22.4% குறைந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 20.2% உயர்ந்துள்ளது. முக்கியமாக பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையில் இவ்வகை மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் இடங்கள் நிரம்பாமல் உள்ளது

அரசு உயர்கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணம் குறைவாக இருந்த போதிலும் மாண்வர்கள் சேர ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் தனியார் கல்லூரிகள்ல் கட்டணம் அதிகமாக உள்ளதால் மாணவர்களின் எண்ணீக்கை குறைந்தாலும் அவர்களால் நிர்வகிப்பதில் சிரமம் ஏற்படுவது இல்லை. அத்துடன் இட ஒதுக்கீடு காரணமாகவும் அரசுக் கல்லூரிகளில் சேர பலர் ஆர்வம் காட்டுவது இல்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழில்நுட்ப மற்றும் உயர் கல்வித் துறை தலைமை செயலர் அஞ்சு சர்மா, “அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர் இன்மையால் குறைந்துள்ளதாக கூறுவது தவறாகும் அரசு மேலும் பல விஞ்ஞான, கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளை திறக்க உள்ளது. ஒவ்வொரு தாலுக்காவிலும் குறைந்தது ஒரு கல்லூரியவது இருக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

குஜராத் பொறியியல் கல்லூரி முதல்வர்கள் சங்க தலைவர் நெகல் சுக்லா, “தற்போது சுமார் 54% இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ளன. ஆகவே அரசு மேலும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. அதே நேரத்தில் கலை மற்றும் விஞ்ஞானக் கல்லூரிகளுக்கு தேவை அதிகம் உள்ளது. அவற்றை தொடங்க தனியார் ஆர்வம் காட்டுவதில்லை. ஆகவே அரசு அதில் கவனம் வைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.