டில்லி

ந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட யாரும் கவர்ந்து செல்ல முடியாது என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.

இந்திய எல்லையில் தற்போது சீன அச்சுறுத்தல் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.  ஏற்கனவே லடாக் எல்லையில் முகாம் இட்டிருந்த சீனப்ப்டைகள் அங்கிருந்து திரும்பி விடுவதாக ஒப்பந்தம் இட்டநிலையில் கலவான பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் உயிர் இழந்தது உலகத்தையே அச்சுறுத்தலில் ஆழ்த்தியது.

நேற்று ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு  பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சீன பிரச்சினை, உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.   அமித்ஷா தனது பேட்டியில், “சீனா விவகாரத்தில் தற்போது ராணுவ மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. நான் அது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.

ஆனால் பிரதமர் மோடி கூறியதைப் போல் நமது நிலத்தின் ஒரு அங்குலத்தைக் கூட யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் யாராலும் நம்மிடம் இருந்து நமது நிலத்தைக் கவர்ந்து செல்ல முடியாது.  இதற்கு முன்பு நடந்த கவ்லான் பள்ளத்தாக்கு தாக்குதலின் போது  இந்தியா தயாரான நிலையில் இல்லை.  இதனால் இந்திய வீரர்கள் மரணத்தைத் தழுவினர்.

தற்போது தனிஷ்க் நகை விளம்பரம் குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது.  இது போல அளவுக்கு மீறிய செயல்பாடுகளை தவிர்க்கலாம்.  இந்த சிறு தாக்குதல் மூலம் இந்தியச் சமூக ஒற்றுமையை உடைக்க முடியாது.  இது மிகவும் வலுவான ஒரு கயிறு, இதை அறுக்க யாராலும் முடியாது.  பிரிட்டிஷ் மற்றும் காங்கிரஸ் கூட இதை உடைக்க முயன்றன.  ஆனால் அது உடையவில்லை.  எனவே இது குறித்து நாம் எவ்வித கவலையும் கொள்ள வேண்டாம்.

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றால் நிச்சயமாக நிதிஷ்குமார் முதல்வர் ஆவார். இது ஏற்கனவே நாங்கள் நிதிஷ்குமாருடன் இணைந்து அரசு அமைக்கும் போதே முடிவு எடுத்ததாகும். இதை ஏற்கனவே நானும் பாஜக தலைவர் நட்டாவும் அறிவித்துள்ளோம்.  இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு 2/3 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். ஐ ஜ த கட்சி அதிக இடங்களைப் பெறவில்லை என்றாலும் நிதிஷ்குமார் முதல்வர் ஆவார்” 3ன தெரிவித்துள்ளார்.