8வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது: பொன்னாரின் திமீர் பேச்சு

நாகர்கோவில்:

சேலம் சென்னை 8வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது , அந்த திட்டத்தை மக்கள் விரும்புகின்றனர் என்று கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் பொன்.ராதாகிருண்ஷன் கூறி உள்ளார். அவரது பேச்சு பாதிக்கப்படும் 5 மாவட்ட மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை- சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை அமைய நிலம் கையப்படுத்தப்பட்டு வந்தது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர்  உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம், நிலம் கையப்படுத்தும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, நிலத்தை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சந்தோஷமடைந்தனர். ஆனால், அவர்களின் சந்தோஷத்தை கெடுக்கும் வகையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 8வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார். இதற்கு பல இடங்களில் மக்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வரும் நிலையில், மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறி உள்ளார்.

கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட  கிருஷ்ணன்கோவில் பகுதியில்  வீதி வீதியாகச் சென்று வாக்குசேகரித்த போது  மேக்களிடையே பேசிய பொன்னார், 8 வழிச்சாலை திட்டம் சிலரின் தூண்டுதலால் மட்டுமே சில இடங்களில் எதிர்க்கப்படுகிறது என்றவர்,  மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்ததால், அந்த திட்டம் மக்கள் விருப்பத்துடன் நிறைவேற்றப்படும், அதை யாரும் தடுக்க முடியாது  என்று கூறினார்.‘

மேலும், கன்னியாகுமரியில் துறைமுகம் அமைந்தால் மீனவர்கள் உட்பட 20 லட்சம் மக்களின் வாழ்வு மேம்படும் என்றும் தெரிவித்தார்.