டாக்கா

ங்கதேசத்தில் இருந்து 1971க்குப் பிறகு இந்தியாவுக்கு யாரும்  செல்லவில்லை என வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுசமான் கான் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநில தேசிய குடியுரிமைப் பட்டியலின் இறுதி வடிவம் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 19 லட்சம்  விண்ணப்பதாரர்கள் பெயர் விடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இவ்வாறு விடுபட்டவர்கள் வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் என அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது. அகதிகளாக நுழைந்த வங்க தேசத்தவர் இங்குத் தங்கி விட்டதாகவும் பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை அன்று வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி  அமைப்பாளரும் அசாம் மாநில நிதி அமைச்சருமான ஹிமதா பிஸ்வா சர்மா, “வங்க தேசம் இந்தியாவின் நட்பு நாடாகும். அவர்கள் நமக்குப் பல விதங்களில் ஒத்துழைப்பு அளிக்கின்றனர் நாம் இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைபவர்கள் பற்றி தகவல் அளிக்கும் போது எல்லாம் அவர்களை அந்நாடு திரும்ப அழைத்துக்கொள்கிறது தற்போது இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை நடத்த உள்ளோம்.: எனத் தெரிவித்தார்.

இது குறித்து வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் அசாதுசமான் கான், “அசாம் தேசிய குடியுரிமைப் பட்டியல் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் ஆகும். இதில் வங்கதேசம் ஒன்றும் செய்ய முடியாது. இது குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக எங்களிடம் அறிவிக்கட்டும். அதன் பிறகு நாங்கள் இது குறித்து முடிவு எடுப்போம். என்னைப்  பொறுத்தவரையில் வங்க தேசத்தில் இருந்து 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு யாரும் இந்தியாவுக்குச் செல்லவில்லை.

பட்டியலில் இடம் பெறாதவர்கள் வங்க மொழி பேசும் இந்தியர்களாக இருக்கக்கூடும். அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து அசாமுக்கு வந்து குடியேறி இருக்கலாம். அவர்கள் நிச்சயமாக வங்கதேச மக்கள்  கிடையாது. வங்க தேசம் உருவானதில் இருந்து இந்தியா உடனான உறவு மிகவும் அருமையாக உLளது அத்துடன் 1971க்கு பிறகு எங்கள் நாட்டவர்கள் யாரும் இந்தியாவுக்குச் செல்லவில்லை என்பதால் இந்திய அரசு யாரையும் வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்காது” எனத் தெரிவித்துள்ளார்.