நேருவுக்கு ஈடு இணை யாரும் இல்லை : சோனியா காந்தி

டில்லி

தவியில் உள்ளவர்களில் யாரும் நேருவுக்கு ஈடு இணை இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்தி கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் “நேரு : இந்தியாவின் கண்டுபிடிப்பு” என்னும் தலைப்பில் ஒரு ஆங்கில புத்தகம் எழுதி உள்ளார். அந்த புத்தக வெளியீட்டு விழா நேற்று டில்லியில் நடந்தது. இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்தி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

சோனியா காந்தி, “இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்ற ஜவகர்லால் நேரு இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைகளை உருவாக்கி நாட்டுக்கு பெருமை தேடித் தந்துள்ளார். அது குறித்து நாம் இன்றும் பெருமைப் படலாம். அந்த கொள்கைகளை நேருயிஸம் என சசிதரூர் குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம் இந்தியாவின் மதச்சார்பின்மை, சமூக பொருளாதாரம், மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் மேம்பட்டு இருந்தன.

ஆனால் தற்போது ஆட்சி செய்பவர்கள் அந்த பழம் பெருமையை கெடுத்து வருவதாக சசி தரூர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் நேரு இந்த நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை என சொல்லி வருகின்றனர். ஆனால் உண்மையில் பதவியில் உள்ளவர்கள் யாரும் நேருவுக்கு ஈடு இணை இல்லை. நாம் நேருவின் வழியில் சென்று நமது ஜனநாயகத்தை காக்க வேண்டும்” என பேசி உள்ளார்.