ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் 2014 நவம்பர் 25ம் தேதி சிட்னியில் நடந்த ‘ஷெபீல்டு ஷீல்டு’ உள்ளூர் போட்டியில் விளையாடினார். நியூ சவுத் வேல்ஸ் அணியை சேர்ந்த சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’ இவரின் கழுத்து பகுதியில் பலமாக தாக்கியது. இதனால், சுயநினைவை இழந்த ஹியுஸ், மருத்துவமனையில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

philhughesinjuryபந்து வீசிய பவுலர் மீதும், ஹெல்மெட் கம்பெனி மீது அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கை விசாரணை செய்த நியூ செளத் வேல்ஸ் நீதிபதி மைக்கேல் பர்ன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது, பந்தை தவறாக கணித்தது அல்லது ஷாட்டை தேர்வு செய்ததில் நிகழ்ந்த தவறின் காரணமாகவே பிலிப் ஹியூஸ் மரணமடைய நேரிட்டது. பவுலர் திட்டமிட்டு பவுன்சரை வீசினார் என்று சொல்ல முடியாது. அதனால் ஹியூஸின் மரணத்துக்கு பவுலர் மீதோ அல்லது மற்றவர்கள் மீதோ பழிசுமத்த முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.