தமிழ் நாட்டில் ஆன்லைன் வழிக் கல்வி கிடையாது : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை

ன்லைன் வழிக் கல்வி தமிழகத்தில் இல்லை எனவும் டிவி மூலம் கற்பிக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் கல்லூரிகளும் கொரோனா கட்டுப்பாடு ஊரடங்கால் மூடப்பட்டுள்ளன.  ஒரு சில தனியார் கல்வி நிறுவனங்கள் ஆனலைன் வகுப்புகளைத் தொடங்கி உள்ளன். இதையொட்டி அரசு மற்று,ம் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆனலைன் வகுப்புக்கள் தொடங்க உள்ளதாகவும் அவற்றை முதல்வர் வரும்  13 ஆம் தேதி தொடங்கி வைப்பார் எனவும்  செய்திகள் வெளியாகின.

இதற்குக் கல்வி ஆர்வலர்கள் மிகவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   பல மாணவர்களால் இணையம் மூலம் கவ்லி கற்க வசதியான லேப்டாப், ஸ்மார்ட் போன் போன்றவை இல்லாத நிலையில் இந்த நடவடிக்கை தவறானது என அவர்கள் கூறினர்  இந்நிலையில் அரசின் அறிவிப்புக்கு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம், “அரசு ஆன்லைன் வகுப்புக்கள் எதுவும் நடத்தப்போவது இல்லை.  மாறாகத் தொலைக்காட்சி மூலம் வகுப்புக்கள் நடத்தப்படும்.  இதில் கல்வித் தொலைக்காட்சி சேனலுடன், பாலிமர் டிவி, புதியதலைமுறை, தந்தி, பொதிகை போன்ற சேனல்க்ளிலும் வகுப்புக்கள் ஒளிபரப்பப்படும்.

தினமும் ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு அந்த நேரங்களில் சில வகுப்புக்கான பாடங்களை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளோம்.   12ஆம் வகுப்பு மாணவர்களிடம் லேப்டாப் உள்ளதால் அவர்களுக்கு மட்டும் பாடங்கள் தரவிறக்கம் செய்து அளிக்கப்படும்.  வாரம் ஒரு முறை கேள்வி கேட்கப்படும்.  இந்த திட்டத்தை முதல்வர் வரும் 13 ஆம் தேதி தொடங்க உள்ளார்.”எனத் தெரிவித்துள்ளார்.