16ந்தேதி பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை! செங்கோட்டையன் பல்டி

சென்னை:

பொங்கலுக்கு மறுநாளான, மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினத்தன்று பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவது குறித்த எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அமைச்சர் செங்கோட்டையன் பல்டியடித்து உள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து உயர்நிலை பள்ளி தலைமையாசியர்களுக்கும் உத்தரவு அனுப்பட்ட நிலையில், தமிழகத்தில் எழுந்த கடுமையான எதிர்ப்பை அடுத்து, அப்படி ஏதும் சொல்லவில்லையே என்று செங்கோட்டையன் கூறி உள்ளார்.

ஏற்கனவே அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள நிலையில், அவரது அறிவிப்புகள் அனைத்தும் வெற்றி அறிவிப்புகள் என்று, ஆசிரியர்கள் மற்றும் மக்களிடையே அம்பலமாகி உள்ள நிலையில், தற்போதைய அறிவிப்பும் அவரது பொய் மகுடத்துக்கு மேலும் புகழ் சேர்த்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் 16ந்தேதி அன்று, தமிகத்தில், தமிழ் மக்களின் பாரம்பரியமான மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர்தினம் கொண்டாடப்படும். அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி  பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் 66 மாணவர்கள் பங்கு பெற உள்ளனர்.

இதையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், பள்ளிக்கு வந்து,  தவறாமல் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்றும்,  இதற்காக பள்ளிகளில் ஏற்பாடு செய்ய வேண்டும் தமிழக பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதனால், தமிழகத்தின் பொதுவிடுமுறை தினமான மாட்டுப்பொங்கல் மற்றும்  திருவள்ளுவர் தினம் விடுமுறை ரத்து செய்யப்படுமோ? என்ற சந்தேகம் எழுந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ் ஆர்வலர்கள் தமிழக அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில்,  ‘பொங்கலுக்கு மறுநாள் விடுமுறையின் போது மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியது கட்டாயமில்லை. பிரதமர் மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டில் இருந்தே கேட்டுக்கொள்ளலாம். விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது’ என்று  தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே 5வது வகுப்பு, 8வது வகுப்பு பொதுத்தேர்வு இல்லை என்று கூறி பின்னர் பல்டி அடித்த செய்திகளை  காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்….

https://www.patrikai.com/will-tn-school-working-day-on-january-16-thiruvalluvar-day-controversy-of-the-government-of-tamil-nadu/

https://www.patrikai.com/3-years-exception-for-5th-and-8th-class-public-exam-says-tamil-nadu-education-minister-sengottaiyan/

https://www.patrikai.com/public-exam-for-5th-and-8th-class-from-current-year-education-minister-sengottaiyan-information/

கார்ட்டூன் கேலரி