புதுடில்லி: அடுத்த ஆண்டு ஒருங்கிணைந்த ஆசியா XI அணியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றாக விளையாடும் வாய்ப்பு எழாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஆசியா XI மற்றும் வேர்ல்ட் XI ஆகியவை 2020 மார்ச் மாதத்தில் வங்கதேசத்தில் இரண்டு டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளன. ஐஏஎன்எஸ் உடன் பேசிய பிசிசிஐ இணைச் செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ் 26ம் தேதி இந்த போட்டிக்கு பாகிஸ்தான் வீரர்கள் யாரும் அழைக்கப்பட மாட்டார்கள் என்ற செய்தியைத் தெரிவித்தார்.

“ஆசியா XI போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்ற தகவலை நாங்கள் அறிந்திருக்கிறோம், அதனால் இரு நாடுகளும் ஒன்றிணைவது அல்லது ஒன்றிற்கு பதிலாக இன்னொன்றைத் தேர்வு செய்வது என்பது குறித்த எந்த கேள்விக்கும் இடமில்லை.  ஆசியா XI அணியின் ஒரு பகுதியாக இருக்கும் ஐந்து இந்திய வீரர்களை சவுரவ் கங்குலி முடிவு செய்வார்“, என்றார்.

“ஆசியா XI Vs வேர்ல்ட் XI விளையாட்டு இருக்கும், ஆனால் அது ஐ.சி.சி.யின் ஒப்புதலுக்கு உட்பட்டது” என்று பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு உறுதிப்படுத்தினார்.

ஆசியா XI அணிக்காக வங்கதேச கிரிக்கெட் வாரியம் பி.சி.சி.ஐ யிலிருந்து விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஹார்டிக் பாண்ட்யா ஆகியோரின் சேவையை நாடியதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

“நாங்கள் தற்போதைய வீரர்களில் சிறந்த வீரர்களைத் தேடுகிறோம், விளையாட்டுகளுக்கு சர்வதேச அந்தஸ்து இருப்பதால், எல்லோரும் அதைப் பற்றி தீவிரமாக இருப்பார்கள்” என்று பிசிபி தலைவர் நஸ்முல் ஹசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூறியிருந்தார்.

இருப்பினும், விஷயங்களை சிக்கலாக்குவது என்னவென்றால், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா ஒரு டி 20 ஐ தொடரில் விளையாட உள்ளது. அவர்களின் தொடரின் கடைசி டி 20 மார்ச் 18 அன்று திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த தேதியில் ஏற்கெனவே ஆசியா XI போட்டிகளில் ஒன்று நடைபெறுவதாகவுள்ளது.