சென்னை: ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற பதாகையை வைக்க வேண்டும் என்று பெட்ரோல் பங்குகளுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழகத்தில் ஹெல்மெட் குறித்த பலவேறு விழிப்புணர்வுகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் ஹெல்மெட் இன்றி சாலைகளில் வலம் வருவோரின் எண்ணிக்கை குறையவே இல்லை.

இந்நிலையில், ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற வாசகம் அடங்கிய பதாகையை பெட்ரோல் பங்குகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சென்னை போக்குவரத்து காவல்துறை பிறப்பித்துள்ளது.

அதேபோல், கார் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் பெட்ரோல், டீசல் இல்லை என்றும் பதாகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மேற்கு, வடக்கு, தெற்கு போக்குவரத்து துணை ஆணையர்கள் தங்கள் சரகத்துக்குள் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.