டில்லி

தேசிய ஊரடங்கு 21 நாட்களுக்கு மேல் அதிகரிக்கப்பட மாட்டாது என மத்திய அமைச்சரவை செயலர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடெங்கும் 21 நாட்கள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மத்திய அரசு பல நிவாரண உதவிகளை அறிவித்தது.

உடனடியாக செலுத்த வேண்டிய கடன் தவணை,வரிகள், உள்ளிட்டவற்றை இன்னும் 3 மாதங்கள் கழித்துச் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி தேசிய ஊரடங்கு இன்னும் 3 மாதங்கள் நீடிக்கலாம் எனச் செய்திகள் உலவின.

இந்நிலையில் மத்திய அமைச்சரவை செயலர்  ராஜிவ் கவுபா ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் தேசிய ஊரடங்கை 21 நாட்களுக்கு மேல் அதிகரிக்க அரசுக்கு எண்ணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.