விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை! நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்

டெல்லி:

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 18ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய சபை நடவடிக்கை யின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தமிழக எம்.பி. ரவிக்குமார், கடன்களால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாகவும்,  அவர்களின் கடன்களை ரத்து செய்வது குறித்து மத்தியஅரசு பரிசீலிக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்ச நரேந்திரசிங் தோமர், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை  என்றும், விவசாயிகளின் தற்கொலை குறித்த விவரங்களை உள்துறை அமைச்சகம் சேகரித்து வருகிறது என்றும் கூறினார்.