சென்னை, 
பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு குழந்தைகளின் விழிப்புணர்வு ஓட்டம் சென்னையில் நடைபெற்றது.
பிளாஸ்டிக்கினால் சுற்றுசூழல் மாசுபடுவதை தவிர்க்க பெரும்பாலான பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் உபயோகம் தடை செய்யப்பட்டுள்ளது.  பெரும்பாலான நகரங்களில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
plastic-awarness-marathan-19
இருந்தாலும் நமது நாட்டில், பொதுமக்களின் பயன்பாட்டில்  பிளாஸ்டிக் பொருட்கள் இன்றியமையாததாகி உள்ளது. ஆகவே,  பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு குழந்தைகளின் ஓட்டம் நடைபெற்றது.
சென்னையை சேர்ந்த கே.ஆர்.எம். பள்ளி குழுமங்கள் சார்பில், கே.ஆர்.எம். சிறப்பு பள்ளி சார்பில் பிளாஸ்டிக் அபாயம் குறித்தும், பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.
1plastic-awarness-marathan-4
சென்னை மெரீனா கடற்கரை கண்ணகி சிலையில் தொடங்கி விவேகானந்தர் இல்லம்வரை நடைபெற்ற இந்த ஓட்டத்தில் ஏராளமான சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்டு கொண்டு ஓடினர்.
இந்த ஓட்டத்தை  நடிகர் எஸ்வி சேகர், வசீகரன் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வி.ஜி பி.சந்தோஷம், திலகவதி ஐ.பி.எஸ்., டிராபிக் ராமசாமி, வணிகர் சங்கதலைவர் வெள்ளையன், டாக்டர் சி.எம்.கே.ரெட்டி,  மனுஷ்ய புத்திரன், ஜோதிபாசு, எக்ஸ்னோரா நிர்மல்குமார்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில்  23 சிறப்பு பள்ளிகளை சேர்ந்த பிள்ளைகள் கலந்துகொண்டனர்.
plastic-awarness-marathan-14