எல்லையில் ஆக்கிரமிப்பை தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்காது: சீனாவுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

டெல்லி: எல்லையில் அத்துமீறலை நிறுத்தாவிட்டால் எந்த நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்க தயங்காது என்று சீனாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலங்களவையில் லடாக் பிரச்னை குறித்து அவர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது: நமது நாட்டை யாரையும் ஆக்கிரமிக்க விடமாட்டோம். எல்லையில் அத்துமீறல் முயற்சிகளை சீனா கைவிடவில்லை என்றால் இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயங்காது.

ஒப்பந்தங்களின் பின்பற்றி சீனா செயல்பட்டால் எல்லையில் அமைதியை நிலைநாட்ட முடியும். எல்லை வரையறை செய்வது குறித்து இரு நாடுகளும் பலசுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், இந்திய எல்லைப் பகுதியில் பல இடங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது. லடாக் பகுதியில் 38 ஆயிரம் சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்பும் அதே நேரத்தில், எதையும் சமாளிக்க தயாராக உள்ளோம் என்று பேசினார்.