ரஃபேல் ஒப்பந்த முறைகேடு விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி: உச்சநீதி மன்றம்

டில்லி:

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், ரஃபேல் விமானம் வாங்குவதில் அரசின் கொள்ளை முடிவு சரியானது என்று கூறி உள்ளது.

ரஃபேல்  விமான ஒப்பந்தம் தொடர்பாக முறைகேடு நடைபெற்றுள்ளது, அதன் காரணமாக ஒப்பந்தம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி 5 பொதுநல மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் மீது விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, ரஃபேல் விமானம் வாங்குவதில் அரசின் கொள்ளை முடிவு சரியானது  என்று கூறிய நீதிபதிகள், ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை  என்று கூறி,  5 பொதுநல மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

பிரான்ஸ் நாட்டின் டசார்ட்  நிறுவனத்திடம்  இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் ரூ.59 ஆயிரம் கோடிக்கு வாங்க மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்திய நிறுகவனமாக அனில் அம்பானியின் நிறுவனமும் இடம்பெற்றிருந்தது. இதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதையடுத்து ஒப்பந்தம் தொடர்பாக சிபி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் மனோகர்லால் சர்மா, பிரசாத் பூஷன் உள்பட முன்னாள் பாஜக அமைச்சர்களான யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி போன்றோர்  வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்கள் மீது பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில்,  நவம்பர் 14ந்தேதி இறுதி வாதம் முடிவடைந்தது. அதையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாளை ரஃபேல் வழக்கில் தீர்ப்பு இன்று வெளியானது.