லக்னோ:

முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் வெற்றி பெறுவேன் என்று வருண் காந்தி தெரிவித்துள்ளார்.


முஸ்லிம்களுக்கு எதிராக மத்திய அமைச்சர் மேனகா காந்தி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிவந்தார்.
இந்நிலையில், பாஜக வேட்பாளராக போட்டியிடும் அவரது மகன் வருண் காந்தியும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

என் முஸ்லிம் சகோதரர்களுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன். நீங்கள் வாக்களிக்காவிட்டாலும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அப்போதும் தங்கள் வேலைக்காக என்னிடம் நீங்கள் வரலாம்.

ஆனால் உங்கள் இனிப்பு என் டீயுடன் கலந்துவிட்டால், என் டீ இன்னும் இனிப்பாகிவிடும். வேறு கட்சி வெற்றி பெற்றால்தான் நான் கவலைப்படவேண்டும். தேர்தல் பரீட்சையில் நான் ஏற்கெனவே பாஸாகிவிட்டேன். என்று தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொண்டு அவர் பேசினார்.

வருண் காந்தி உத்திரப்பிரதேச மாநிலம் பிலிப்பிட் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவர் கடந்த 10 ஆண்டுகளாக பிலிப்பிட் தொகுதியின் பாஜக எம்பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.