தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை இல்லை  வானிலை ஆய்வு மையம்

சென்னை

மிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் குறைந்த தாழ்வழுத்த பகுதி உருவாகி உள்ளது.   அது புயலாக மாறி தமிழகத்தை கடக்கும் எனவும் அதனால் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தற்போது வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம், ”தற்போது உருவாகி உள்ள குறைந்த தாழ்வழுத்த பகுதி வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த தாழ்வழுத்த பகுதியாக மாற இன்னும் 48 மணி நேரம் ஆகலாம்.  அதனால் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும்.

ஆகையால் மீனவர்கள் இன்னும் 3 நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள்.  அத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை.   மொத்தத்தில் சென்னையில் வரண்ட வானிலை காணப்படும்” என தெரிவித்துள்ளார்.