எல்லா நாட்களும் காரணம் சொல்ல முடியாது: விராத் கோலி

பெங்களூரு: இந்த ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடிவரும் விராத் கோலியின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தொடர்ந்து தனது 6வது தோல்வியை சந்தித்துள்ளது.

இதனையடுத்து, ஒவ்வொரு தோல்விக்கும் காரணம் சொல்லி தப்பிக்க முடியாது என்று மனம் நொந்து கூறியுள்ளார் விராத் கோலி.

டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில், முதலில் பேட் செய்த பெங்களூரு அணி, 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இப்போட்டியில், வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடினார் கோலி. 33 பந்துகளில் 41 ரன்களை மட்டுமே எடுத்தார்.

ஆனால், பின்னர் ஆடிய டெல்லி அணி, இலக்கை எட்டி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுவிட்டது.

160 ரன்களை எடுத்திருந்தால் வென்றிருக்க வாய்ப்புண்டு என்ற கோலி, ஒவ்வொரு தோல்விக்கும் காரணம் கூறிக்கொண்டிருக்க முடியாது என்றும் தனது கருத்தைப் பதிவுசெய்தார்.

– மதுரை மாயாண்டி