டுப்பி

டுப்பியில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய கூட்டத்தில் ராமர் கோயில் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

கர்னாடகா மாநிலம் உடுப்பியில் கடந்த மூன்று தினங்களாக தர்ம சன்சத் என்னும் பெயரில் விஸ்வ இந்து பரிஷத் ஒரு இந்து சமய கூட்டத்தை நிகழ்த்தியது.  இதில் இந்து மதத் தலைவர்கள், சன்னியாசிகள், மடாதிபதிகள் ஆகியோர் கலந்துக் கொண்டு ராமர் கோயில் கட்டுவதைப் பற்றி உரையாற்றினர்.

கர்னாடகா மாநில விஸ்வ இந்து பரிஷத் செயலாளர் கோபால் தனது உரையில் ராமர் கோவில் இந்த வருடம் டிசம்பரில் கட்ட ஆரம்பித்து வரும் 2018 அக்டோபருக்குள் முடிக்க தீர்மானம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  கலந்துக் கொண்ட பிரமுகர்களில் பலர் இதே கருத்தை வலியுறுத்தினர்.   ஆனால் இது பற்றி எந்த ஒரு தீர்மானமும் இயற்றப் படாமலே கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.  இதையொட்டி இந்து மடாதிபதிகளிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

இந்தக் கூட்டத்தில் இந்துக்கள் அனைவரும் வரும் 2018 ஆம் வருடம் மார்ச் 18ஆம் தேதியில் இருந்து மார்ச் 21ஆம் தேதி வரை அயோத்யாவில் ராமர் கோவில் கட்டும் முயற்சி வெற்றி பெற பிரார்த்தனைகள் நிகழ்த்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.