பெங்களூரு

விவசாயக் கடனை தள்ளுபடி செய்யக்கோரி முதல்வர் குமாரசாமிக்கு எதிராக பாஜக அறிவித்த கர்நாடக மாநில கடை அடைப்புக்கு ஆதரவு கிடைக்கவில்லை என தகவல்கள் வந்துள்ளன.

கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தின் போது விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி வாக்களித்திருந்தார்.   முதல்வராக பதவி ஏற்ற பின் அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்தார்.   முதல்வர் குமாரசாமியை எதிர்த்து பாஜக கர்நாடக மாநிலத்தில் முழுக் கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இன்று தேர்தல் நடைபெறும் ராஜராஜேஸ்வரி நகர் தவிர மற்ற இடங்களில் கடை அடைப்பு நடைபெறும் என எடியூரப்பா அறிவித்திருந்தார்.

பாஜக அழைப்பு விடுத்திருந்த கடை அடைப்புக்கு இன்று பொதுமக்கள் ஆதரவு தரவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.   மாநிலம் எங்கும் உள்ள அனைத்து அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.  போக்குவரத்து தடை இன்றி நடைபெற்று வருகிறது.   அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் தொழிற்சாலைகளும் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றன.