காஷ்மீர் விவகாரத்தில் 3வது நபர் தலையீடு அனுமதிக்க முடியாது! ஐ.நா. தலைவருக்கு பதிலடி

டெல்லி:

காஷ்மீர் விவகாரத்தில் யார் தலையீடும் வேண்டாம், 3வது நபரை அனுமதிக்க முடியாது என்று  ஐ.நா தலைவரின் வேண்டுகோளை  இந்தியா நிராகரித்து உள்ளது. மேலும், ராணுவ பார்வையாளர் குழுவும் அவசியமற்றது என்று தெரிவித்து உள்ளது.

மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து  அதை இரு மாநிலங்களாக பிரித்து நிர்வாகம் செய்து வருகிறது.

இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்நாட்டுக்கு ஆதரவாக சில நாடுகள் கருத்துக்கள் தெரிவித்து வந்தன. அதற்கு பதிலடிகொடுத்து வரும் இந்தியா, காஷ்மீர் உள்நாட்டு விவகாரம், இதில் 3வது நபர் தலையிட அனுமதிக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறி வருகிறது.

இந்த நிலையில், தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஐ.நா. செயலாளர் ஆன்டனியோ கட்டெரஸ்,  இந்தியாவும் பாகிஸ்தானும் சம்மதம் தெரிவித்தால் காஷ்மீர் விவகாரத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை சரி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.  ”ஐக்கிய நாடுகள் சபை யின் சாசனம் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களின்படி தீர்வுகளுடன் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் ஒரே கருவியாக அரசியல் முடிவுகள் மற்றும் அமைதி பேச்சுவார்த்தை உள்ளது” , இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஐ.நா. இராணுவ பார்வையாளர்கள் குழு உறுப்பினர்களுக்கு  (UN Military Observers Group in India and Pakistan) அதிக அளவு சுதந்திரம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகவே செயல்படும். பாகிஸ்தானில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இடம் குறித்த பிரச்சனைகளுக்கு தான் தீர்வு காண வேண்டும். அப்படி தீர்வு காண இருப்பதாக இருந்தாலும் அது இருநாட்டுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளப்படும். மூன்றாம் நபரின் தலையீடு இதில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், சிம்லா ஒப்பந்தத்திற்கு பிறகு ஐ.நா. ராணுவ பார்வையாளர்கள் குழு அவசியமற்றது  என்று கருதி வருகிறது என்றும்   மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் பதில் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை பாகிஸ்தான் விஷயத்தில் தலையிட முயற்சி செய்ததும், அதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

 

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'No role for third party': India rejects UN chief's mediation offer on Kashmir, Antonio Guterres, india, Kasmir issue, Pakistan, UN secretary, UN Secretary-General Antonio Guterres, ஆன்டோனியா கட்டர்ஸ், இந்தியா, ஐ.நா செயலாளர், ஐநா, ஜம்முகாஷ்மீர், பாகிஸ்தான், ரவீஸ்குமார்
-=-