அறிவிப்பாளர்களை அழ வைக்கும் மத்திய அரசு…

கொரோனா வைரசை அடக்கும் நோக்கில் ஊரடங்கை அறிவித்த மோடி,’’இந்த முழு அடைப்பின் போது முதலாளிகள் யாரும் வேலைக்காரர்களை வீட்டுக்கு அனுப்ப கூடாது’’ என்று தெரிவித்தார்.

திரும்ப திரும்ப ‘’ லே ஆஃப்’’ கூடாது என வலியுறுத்தினார், நமது பிரதமர்.
நடப்பது என்ன?

ஊருக்கெல்லாம் அதிகாரப்பூர்வ செய்திகளை கொண்டு செல்லும் ஆயுதமாக இருக்கும், ;பிரச்சார் பாரதி’,மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, ஓர் நிறுவனம்.

ஆல் இந்திய ரேடியோ, தூரதர்ஷன் போன்றவை பிரச்சார் பாரதி கண்காணிப்பில் உள்ளவை.
டெல்லியில் ’எஃப்.எம். கோல்டு’ ரேடியோ மிகவும் பிரசித்தம்.

இது- ஆல் இந்தியா ரேடியோவின் ஓர் அங்கம். இந்த எஃப்.எம்.கோல்டு ரேடியோவில் ஒப்பந்த அடிப்படையில் 80 ஜாக்கிகள் (அறிவிப்பாளர்கள்) பணியாற்றி வருகிறார்கள்.

அவர்களுக்கு, வேலைக்கு வந்தால்தான் நாட்கள் அடிப்படையில் சம்பளம்.
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி முதல் அவர்கள் வேலைக்கு அழைக்கப்படவில்லை.

அதாவது- அவர்கள் எந்த முன் அறிவிப்பும் இன்றி, வேலையில் இருந்து நிறுத்தப்பட்டு விட்டார்கள்.
சம்பளம் கொடுக்கப்பட மாட்டார்கள் .

இது- டெல்லியில் மட்டும் நடக்கவில்லை.
நாடு முழுவதுமே, ஆல் இந்தியா ரேடியோவில் வேலை பார்க்கும் பகுதி நேர ஜாக்கிகள் பணி இழந்துள்ளனர்.

ஊரடங்கின் போது, மோடி சொன்னது என்ன?

இப்போது மோடியின் கீழ் உள்ள நிறுவனத்தில் நடப்பது என்ன என்று கேட்கிறார்கள், ஒப்பந்த (ரேடியோ) அறிவிப்பாளர் யூனியன் சங்கத்தினர்.