ஏப்ரலில் பூஜ்யம்.. ஒரு வாகனம் கூட  விற்காத மாருதி, ,ஹூண்டாய்…

ஏப்ரல் மாதம், தனது முதல் தேதியில்தான் எல்லோரையும் முட்டாளாக்கும்.

இந்த ஆண்டில் ,ஏப்ரல் மாதம் 30 தேதிகளிலும், சில தொழில் நிறுவனங்களை முட்டாள் ஆக்கிவிட்டது

இந்தியாவின் மிகப்பெரும் மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசுகி லிமிடெட் ஏப்ரல் மாதத்தில் உள் நாட்டில் ஒரு வாகனத்தைக் கூட விற்பனை செய்யவில்லை.

காரணம்: ஊரடங்கு.

ஆனாலும், ஏப்ரல் மாதத்தில் துறைமுகங்கள் கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டதால், 632 வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது, மாருதி.

ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கதையும் இது தான்.

ஏப்ரல் மாதத்தில் இந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை, பூஜ்யம்.

எனினும் வெளிநாடுகளுக்கு ஆயிரத்து 341 வாகனங்களை ஏற்றுமதி செய்து, நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

இரு நிறுவனங்களும் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்த சோக தகவலை நாட்டு மக்களுக்குத் தெரிவித்துள்ளது.

  – ஏழுமலை வெங்கடேசன்