சீட் இல்லை: அ.தி.மு.க. பெண் நிர்வாகி தீக்குளிப்பு

சென்னை:

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பில்லையா என்று கேட்டு அ.தி.மு.க. பெண் பிரமுகர் தீக்குளித்தார்.

திருவள்ளுர் அருகிலுள்ள வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமாரி. திருவள்ளுர் மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளராக பொறுப்பு வகிக்கும் இவர், மாவட்ட கவுன்சிலராகவும் பதவிவகிக்கிறார்.

images

வரும் உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் போட்டியிட கட்சியில் விருப்ப மனு அளித்திருந்தார். இந்த நிலையில் தனக்கு சீட்டு கிடைக்காது என்று கேள்விப்பட்ட செல்வக்குமாரி இன்று திங்கள்கிழமை மாலை சென்னையில் உள்ள எம்எல்ஏ ஹாஸ்டலுக்கு வந்தார். அங்கு தங்கியிருந்த திருவள்ளுர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், பொன்னேரி எம்எல்ஏவுமான பலராமன், திருவள்ளுர் எம்பி வேணுகோபால் ஆகியோரை சந்தித்து தனக்கு ஏன் சீட்டு தரவில்லை. சீட் தர மறுக்கிறீர்கள் என்று வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் இருதரப்புக்கும் வாய்த்தகராறு ஏற்பட்ட.. ஒரு கட்டத்தில் செல்வக்குமாரி தான் எடுத்துச் சென்ற மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

உடனடியாக எம்எல்ஏ ஹாஸ்டல்  இருந்த ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதோடு, 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் கொடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்வக்குமாரி  சிகிச்சை பெற்று வருகிறார்.