அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை துறையினர் “யூ/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

25ம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படம் ப்ரீ பிசினஸில் மட்டும் படம் ரூ. 220 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்துடன் கார்த்தியின் ‘கைதி திரைப்படமும் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை – விதியை மீறி ஒளிபரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி அளித்துள்ளார்.