பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா. சிறையில் அவர் எப்படி இருக்கிறார் அவருக்கு என்னென்ன வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தினம் தினம் வெவ்வேறுவிதமான தகவல்கள் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அதிகாரப் பூர்வமான விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இதுதொடர்பாக கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்திய நாராயண ராவ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்தருப்பதாவது: அமைதி பெங்களூரு மத்திய சிறையை பொறுத்தவரை 200-க்கும் குறைவான பெண் கைதிகளே இருக்கிறார்கள். பாதுகாப்புக்காக 3 மகளிர் சிறை கண்காணிப்பாளர்கள் இருக்கின்றனர்.

அமைதி

“சிறையில் சசிகலா நன்றாக இருக்கிறார். பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக காணப்படுகிறார். சாப்பாடு மற்ற கைதிகளுக்கு உணவு அளிக்கப்படும் அதே நேரத்தில் அவருக்கும் உணவு அளிக்கப்படுகிறது. தினமும் காலையில் புளி சாதம், உப்புமா, அவலக்கி (அவலில் சமைக்கப்பட்ட சாதம்), சித்ரன்னா (எலுமிச்சை சாதம்) ஆகியவறறில் ஏதாவது ஒன்று அளிக்கப்படும்.

மதியம் கேழ்வரகு களி, சோறு, சப்பாத்தி ஆகியவற்றில் ஏதேனும். இரவில் சப்பாத்தி, களி ஏதேனும் வழங்கப்படுகின்றன. வாரத்திற்கொரு முறை ஆட்டுகறி கோழிக்கறி வழங்கப்படும்.ஒரு நாளைக்கு ஒரு முறை டீ அல்லது காபியும் அளிக்கப்படுகறது அறை பெங்களூரு மத்திய சிறையில் “ஏ” கிளாஸ், “பி” கிளாஸ் என எந்த வித்தியாசமும் கிடையாது. சசிகலாவுக்கு எந்த சிறப்பு அறையும் அளிக்கப்படவில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவதைப் போன்ற சாதாரண அறையே ஒதுக்கப்பட்டுள்ளது. தரையில் படுத்தார் நேற்று இரவு கூட‌ சசிகலா, தரையில்தான் படுத்திருந்தார். குளிர் அதிகமாக இருப்பதாக சொன்னார். ஆகவே, கூடுதலாக இரண்டு போர்வைகள் அளிக்கப்பட்டன.

உடன் இருப்பவர் கொலைக் குற்றவாளியா?

சசிகலாவின் அறையில், கொலைக் குற்றவாளியான பெண் ஒருவர் அடைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் தவறு. கைதிகள் மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக மற்ற கைதியுடன் தங்க வைக்கப்படுவது வழக்கம். ச‌சிகலா கேட்டுக்கொண்டதால் அவருடன் இளவரசி மட்டும் தங்கியுள்ளார்.

மற்ற கைதிகள் மூலம் சசிகலாவுக்கு ஆபத்து வர வாய்ப்பு இருப்பதாக அதிமுக வினர் அச்சப்படுகிறார்களே? கூடுதலாக பாதுகாப்பு வழங்கப் படுமா? இதெல்லாம் தேவையற்ற அச்சம். குற்ற வழக்கில் தண்டனை பெற்றதாலே சசிகலா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அவர் நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை. இருப்பினும் எல் லோருக்கும் வழங்கப்படு வதைப் போல பாதுகாப்பு வழங் கப்படும். சிறை மாற விரும்பினால்.. சசிகலா தமிழக சிறைக்கு மாற விரும்புகிறார் என்பது போன்ற செய்திகள் குறித்து எனக்குத் தெரியாது. கைதி விரும்பினால் ஒரு சிறையில் இருந்து வேறு சிறைக்குள் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படும்.

அதற்கு நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இரு மாநில அரசுகளும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். சசிகலா தேவைப்பட்டால் இந்தியாவுக்குள் எந்த சிறைக்கு வேண்டுமானாலும் தன்னை மாற்ற கோரலாம். அதற்கு நாங்கள் எதுவும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். சசிகலாவின் கைதி எண் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட கைதி எண் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின்ற. இது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

இதெல்லாம் ஏன் வெளியே சொல்ல வேண்டும்? இதைத் தெரிந்து கொண்டு மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? சிறையில் கைதிக்கு எண்கள் வழங்கப்படுவது, அலுவல் ரீதியான பணிகளுக்கு மட்டும் இல்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவும்தான். கைதி எண்ணைத் தெரிந்து கொண்டு சில குற்றவாளிகள் சசிகலாவைத் தாக்கினால் என்ன செய்ய முடியும்.

ஆகவே, கைதி எண்ணைச் சொல்ல முடியாது. அதேபோல, சில கைதிகளுக்கு அவ்வப்போது கைதி எண்ணையும், அறையையும் மாற்றிக்கொண்டே இருப்போம். அதையெல்லாம் வெளிப்படையாக கூற முடியாது. வேலை சசிகலாவுக்கு மெழுகுவர்த்தி செய்யும் பணி ஒதுக்கப்பட்டுள்ள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை எல்லா கைதிகளும் குற்றவாளிகள் தான். யாருக்கு் எந்த சிறப்பு சலுகையும் அளிக்கப்படவில்லை

இப்போதைக்கு சசிகலா எந்த வேலையும் செய்யவில்லை. தேவைப்பட்டால் அவர் விரும்பும் வேலையை செய்யலாம். அதற்காக பயிற்சி அளிக்கப்படும். நாட்டுக்காகவா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியான சசிகலாவுக்கு ஊடகங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்றன? அவருக்கு இங்கே எந்தவித சிறப்பு சலுகையும் கிடையாது! அவர், நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை!” இவ்வாறு டிஜிபி சத்திய நாராயண ராவ் தெரிவித்தார்