சென்னை:

த்திவரதர் உற்சவத்திற்கு வந்த மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி யாரும் மரணம் அடைய வில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

40ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரை விட்டு வெளியே வந்து 48நாட்கள் தரிசனம் தரும் அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, தமிழகஅரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அத்திவரதரை தரிசிக்க வந்தவர்களில் யாரும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்கவில்லை என்று தெரிவித்து உள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு  ஏற்கனவே உடல்நல பாதிப்பு இருந்துள்ளது. அத்திவரதரை தரிசித்தப் பிறகே 6 பேரும் உயிரிழந்துள்ளனர், கூட்ட நெரிசலில் சிக்கி யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதில் மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து வழக்குகளிலும் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.