புதுடெல்லி: இந்தியாவில், பணிபுரியும் ஆண்களில் 82% பேரும், பெண்களில் 92% பேரும், மாதத்திற்கு ரூ.10,000க்கும் குறைவான ஊதியம் பெறுவோராய் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் இந்த அதிர்ச்சிகர உண்மை தெரியவந்துள்ளது.

இதன்படி பார்க்கையில், இந்தியாவில் பணிபுரிவோரில், மிகப்பெரும்பான்மையோருக்கு, வாழ்க்கை நடத்துவதற்குரிய நியாயமான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது. அரசுப் பணிகளின் மீது மக்களின் மோகம் அதிகரிப்பதற்கான காரணம் இதன் பின்னணியில் நமக்கு விளங்குவதை உணரலாம்.

இந்த ஆய்வின் வழியாக, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாகவும், வேலைவாய்ப்பு விகிதத்தின் வளர்ச்சி மிகவும் குறைவாய் உள்ளதாயும், படித்த இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும், வேலையில்லா திண்டாட்டம், இந்தியாவிலேயே வட மாநிலங்களில்தான் அதிகம் உள்ளதாகவும் பல விபரங்கள் தெரியவருகின்றன.

– மதுரை மாயாண்டி