மிர்தசரஸ், பஞ்சாப்

னடா பிரதமர் பஞ்சாப் முதல்வரிடம் காலிஸ்தான் இயக்கத்துக்கு கனடா ஆதரவு அளிக்காது என உறுதி அளித்துள்ளார்.

கடந்த 1980களில் பஞ்சாபில் பிரிவினை கோரி காலிஸ்தான் இயக்கம் ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தது.   அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் “ப்ளூ ஸ்டார்” நடவடிக்கையால் அந்த அமைப்பு ஒடுக்கப்பட்டது.    அதன் காரணமாக தனது மெய்க்காவலர்களால் இந்திரா காந்தி  சுட்டுக் கொல்லப்பட்டார்.     அந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இன்றும் ஆதரவாளர்கள் உள்ளனர்.

கனடா நாட்டில் காளிச்தான் இயக்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளனர்.   அவர்கள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு  ஆதரவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.   கனடா பிரதமரும் கடந்த ஏப்ரல் மாதத்தில் நட்ந்த காலிஸ்தான் தின நிகழ்வில் கலந்துக் கொண்டார்.    இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கியது.   தற்போது குடும்பத்துடன் இந்திய சுற்றுப்பயணம் வந்துள்ள ட்ரூடோவுக்கு அரசு சார்பில் வரவேற்பு மற்றும் மரியாதை அளிக்கப்படவில்லை.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலைக் காண ட்ரூடோ வந்த போது அவரை பஞ்சாப் முதல்வர் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று சந்தித்தார்.   இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடம்நடைபெற்றது.   அப்போது முதல்வர் பஞ்சாப் பிரிவினைவாத வன்முறை அமைப்புகளைப் பற்றிய பட்டியலை ட்ரூடோவிடம் அளித்துள்ளார்.   அந்த பட்டியிலில் உள்ள 9 இயக்கங்களின் வன்முறைச் செயல்களை எடுத்துரைத்தார்.

அதன் பின் கனடா பிரதமர், “இந்தியாவில் மட்டுமின்றி உலகில் உள்ள எந்த பிரிவினை வாத அமைப்புக்கும் கனடா அரசு ஆதரவு அளிக்காது.    முக்கியமாக காலிஸ்தான் போன்ற பயங்கர வாத இயக்கங்களுக்கும்  கனடா அரசு ஒருபோதும் ஆதரவு அளிக்காது”  என உறுதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து அமிர்த சரஸில் உள்ள பொற்கோவிலுக்கு ட்ரூடோ சென்றார்.   அவருடைய குடும்பத்தினரும் அவருடன் சென்றுள்ளனர்.    அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.    அவரும் அவர் குடும்பத்தினரும் சிக்கியர்களின் பாரம்பரிய உடை அணிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.