அரியானா மசூதி கட்டுவதில் தீவிரவாத நிதி உதவி இல்லை : டில்லி அரசுஅறிவிப்பு

லவால், அரியானா

ரியானா மாநிலத்தில் பலவால் பகுதியில் மசூதி கட்டுவதில் எந்த ஒரு தீவிர வாத அமைப்பும் நிதி உதவி அளிக்கவில்லை என டில்லி அரசு சிறுபான்ம்மை துறை தெரிவித்துள்ளது.


அரியானா மாநிலத்தில் அமைந்துள்ள பலாவல் பகுதியில் உத்தவார் என்னும் இடம் உள்ளது. அங்கு குலஃபா ஈ ரஷிதீன் என்னும் பெயரில் மசூதி ஒன்று கட்டப்படுகிறது. இந்த மசூதியை கட்ட தீவிரவாத இயக்கங்களான லஷ்கர் இ தொய்பா மற்றும் ஃபலா இ இன்சானியத் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து பண உதவி பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

டில்லியின் நிஜாமுதீன் பகுதியில் வசித்து வரும் முகமது சல்மான் என்னும் ஹவாலா இடைத் தரகர் மூலமாக தீவிர வாத இயக்கங்கள் மசூதிக்கு நிதி உதவி அளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை ஒட்டி டில்லி அரசின் சிறுபான்மைத் துறை ஒரு விசாரணை குழுவை அமைத்தது. அந்த குழுவின் உறுப்பினர்கள் கடந்த மாதம் 20 ஆம் தேதி மசூதி அமைக்கப்பட்டு வரும் இடங்களை சோதனை இட்டனர்.

இந்த சோதனையின் முடிவை குழு வெளியிட்டுள்ளது. அதில், ”இந்த மசூதி கட்டப்படும் இடமான 10 ஏக்கர் நிலத்தை உள்ளூர் இஸ்லாமியர்களும் இந்துக்களும் சேர்ந்து அளித்துள்ளனர். அந்த நிலத்தில் ஒரு மசூதியும் மதரசாவும் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் குற்றம் சாட்டப்பட்ட சல்மான் தனது நிலத்தை விற்று அந்தப் பணத்தை மசூதி அமைக்க கொடுத்துள்ளார்.

அத்துடன் இந்த மசூதி அமைக்க பண உதவி செய்வதாக சொல்லப்படும் இரு அமைப்புகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை. அதனால் அந்த இரு அமைப்புகளும் இணைந்து பண உதவி செய்வதாக கூறப்படுவது தவறான கருத்தாகும். எனவே இந்த மசூதி அமைக்க எந்த தீவிரவாத இயக்கமும் பண உதவி செய்யவில்லை என்பது தெளிவாகி உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.