குஜராத்:  சுங்கச்சாவடிகளில் இருந்து தனியார் வாகனங்களுக்கு விடுதலை!

காந்தி நகர்:

ரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல்  குஜராத் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் கார்கள், சிறு வாகனங்கள், ஆட்டோக்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் ஆனந்திபென் படேல் அறிவித்துள்ளார்.

குஜராத்தின்  வல்சாத் பகுதியில் பல்சோண்டி கிராமத்தில் அம்ரா வன மகோத்சவ் நிகழ்ச்சியை நேற்று முன்தினம் முதல்வர் ஆனந்திபென் படேல்  துவங்கி வைத்தார்.  அப்போது  அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், “இந்த விலக்கு தனியார் வாகனங்களுக்கு மட்டுமே. வாடகை கார்கள், வர்த்தக ரீதியான வாகனங்கள்வழக்கம்போல் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த வேண்டும்.

a

குஜராத்தில், சுமார் 50 சுங்கச் சாவடி மையங்கள் உள்ளன. இந்த அறிவிப்பு மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.80 கோடி முதல் ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படும். மேலும், தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளும் இத்திட்டத்தில் இணைக்கப்படுவதால், ஆண்டுக்கு சுமார் ரூ.250 கோடி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

.  இந்த அறிவிப்பால் சுங்கச் சாவடி கட்டண ஒப்பந்ததாரர் களுக்கு ஏற்படும் இழப்பை மாநில அரசு வழங்கும்” என்று ஆனந்தி பென் படேல் தெரிவித்தார்.