நீட் முறைகேட்டில் ஈடுபட்டோரின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை: கைவிரித்த ஆதார் ஆணையம்

சென்னை: நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் புகைப்பட  விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கில்  15க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளது. அதில் நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியிடப்பட்ட 10 மாணவர்களின் புகைப்படங்களை வைத்து, விபரங்களைத் தருமாறு  சிபிசிஐடி ஆதார் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது.

இந் நிலையில் குறிப்பிட்ட 10 பேரின் போட்டோ விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் சிபிசிஐடிக்கு பதில் அனுப்பி உள்ளது.