கேப்டவுன்: ஒருநாள் தொடருக்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தாய்நாடு திரும்பிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதனால், அந்த அணியின் வீரர்கள் நிம்மதியடைந்துள்ளர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையில் மார்ச் 12ம் தேதி நடைபெறவிருந்த முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக ரத்துசெய்யப்பட்ட நிலையில், அடுத்த 2 போட்டிகளும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரத்துசெய்யப்பட்டு, தென்னாப்பிரிக்க அணியினர் தாய்நாடு திரும்பினர்.

கடந்த மார்ச் 18ம் தேதி நாடு திரும்பிய அவர்கள், முன்னெச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால், பரிசோதனைகளின் முடிவில் அவர்களின் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதால், சம்பந்தப்பட்ட அனைவரும் நிம்மதியடைந்தனர்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்.மஞ்ச்ரா, வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்ற தகவலை உறுதிப்படுத்தினார்.