போர் வேண்டாம்… பேச்சு நடத்தலாம்: மத்தியஅரசுக்கு மன்மோகன் சிங் ஆலோசனை

டில்லி:

ந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், முன்னாள் பிரதமரான மன்மோகன், சிங், இரு நாடுகளிடையே பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணலாம், போர் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிரடித் தாக்குதல் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்திய விமானப்படை பாகிஸ்தானுக் குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை சூறையாடியது. . இதனை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில்,  மத்திய அரசுக்கு துணை நிற்பதாக எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்,  டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது,  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு  மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டுமே  என்றும்,   ஒருவரை ஒருவர் தாக்கி கொல்ல கூடாது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் மக்கள் வறுமை மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவே அவர்களுக்கு சவாலாக உள்ளது. இந்த நிலையில் போர் தேவையற்றது.. இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலமே சுமூக தீர்வு காண முடியும் என்றும், இருநாடுகளுக்கு இடையேயான போர் பதட்டம் விரைவில் தணியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஏற்கனவே, மன்மோகன் சிங் ஆட்சியின்போது, பயங்கரவாதிகளால் மும்பை தாக்குதல் நடத்தப்பட்டபோது, அதற்கு பதிலடியாக  பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த இந்திய விமானப்படை தயாராக இருந்தது. ஆனால் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்து விட்டது குறிப்பிடத்தக்கது.