சண்டிகர்:

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக 71 வயதாகும் அமரீந்தர் சிங் 16ம் தேதி பதவி ஏற்கவுள்ளார். அவருடன் சில அமைச்சர்களும் பதவி ஏற்கவுள்ளனர். பஞ்சாப் கவர்னர் சிங் பட்நோர் பதவி பிரமாணம் செய்து வை க்கிறார். பதவி ஏற்பு விழா ஆடம்பரமில்லாமல் எளிமையான முறையில் ராஜ்பவனில் நடக்கும் என்று அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘ கடந்த கால ஆட்சியாளர்களால் பஞ்சாப் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி தவிக்கிறது. இ ந்த நிலையில் இருந்து பஞ்சாப்பை மீண்டும் பழைய நிலைக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்ற பாதைக்கு கொண்டு வர நி ச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வளர்ச்சிக்கு மக்கள் ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும். மாநிலத்தில் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடக்கும். இந்த விழாவை ஆடம்பரமாக நடத்துவதால் எவ்வித பலனும் கிடைக்க போவதில்லை’’ என்றார்.

காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவராகவுள் உள்ள அமரீந்திர் சிங் மேலும் கூறுகையில், ‘‘ சிக்கன நடவடிக்கையாக இந்த விழாவை எளிமையாக நடத்த வெற்றி பெற்ற அனைத்து எம்எல்ஏ.க்களும் ஒத்துழைக்க வேண்டும். அதேபோல் தொண்டர்களும் பதவி ஏற்பு விழாவுக்காக சண்டிகரில் சாலை போக்குவரத்தை முடக்கி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம்.

பதவி ஏற்றவுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுபயணம் மேற்கொள்ளப்பட்டு அரசியலமைப்பு தேவைகள் அனைத்தையும் இ ந்த அரசு கண்டிப்பாக செய்து கொடுக்கும். தேர்தலில் காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். புதிய அரசின் ஒவ்வொரு அடியும் மாநிலத்தின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டே எடுத்து வைக்கும். நிதி பிரச்னையில் இருந்து பஞ்சாப் கண்டிப்பாக மீட்டு கொண்டு வர புதிய அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.